திருச்சியில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு முகாமில் உள்ள 30 இலங்கை தமிழர்கள், மாத்திரை உற்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த வைத்தியசாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.