திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்குத் திரும்பியது

அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது, காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.