தூக்குத் தண்டனை!

அப்போது 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் மீது 2013-இல் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது. மேலும் அவர் மீது பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் அக்பர் புக்தி கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகள் தொடரப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தேசத் துரோக வழக்கு தொடர்பாக பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதனிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக முஷர்ரப் துபாய் சென்றார். ஒருவித அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2018-இல் நடந்த விசாரணையின் போது முஷர்ரப்பை கைது செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் முஷர்ரப்பிற்கு தூக்குத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்வார் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் நாட்டின் 10 ஆவது ஜனாதிபதியாக இருந்த அவர், 1999-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரி போல் செயல்பட்டதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நவாப் ஷெரீப்பின் ஆட்சியை சதி செய்து கவிழ்த்தவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது இவர் உடல்நலக் குறைவால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முஷர்ரப் மீது தேசத்துரோக வழக்கு, டிசம்பர் 2013 பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முஷாரப் மீது மார்ச் 31, 2014 அன்று குற்றம் சாட்டப்பட்டது, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் தாக்கல் செய்தது. இருப்பினும், மேன்முறையீட்டு மன்றங்களில் வழக்கு காரணமாக முஷர்ரப் வழக்கு நீடித்தது.

அவர் இன்னும் நாடு திரும்பவில்லை. தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வியாதி ஆபத்தானது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெஷாவர் மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அஹ்மத் சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட பெஞ்ச், பர்வேஸ் முஷர்ரஃபுக்கு தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

பெர்வேஸ் முஷர்ரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் ஜனாதிபதியானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தார். 2007 மார்ச் மாதம் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து துபாய் நகருக்குச் சென்ற அவர், 2016இல் இருந்து அங்கேயே வசித்து வருகிறார்.

முஷர்ரப்க்கு ‘அமிலோய்ட்’ என்ற என்ற புரதச்சத்து அபரிமிதமாக உயர்வதால் ஏற்படும் ‘அமிலோய்டோசிஸ்’ நோய் ஏற்பட்டுள்ளது. துபாய் மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடியே வீடியோ ​ெகான்பரன்சிங் வாயிலாக வாக்குமூலம் அளிக்க தயார் என நீதிமன்றத்துக்கு ஒரு வீடியோ அனுப்பி கோரிக்கை வைத்திருந்தார் முஷர்ரப்.

சர்ச்சைப் பேச்சு:

“காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்போம். அவர்கள் இந்திய இராணுவத்துடன் போரிடுவார்கள்” என்று முஷர்ரப் தெரிவித்துள்ள பழைய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், 2015-ம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை குவெட்டா நகரைச் சேர்ந்த ஹமீது மன்டோகைல் என்பவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். உடனே பலரும் பகிர்ந்ததால், அந்த வீடியோ ‘வைரல்’ ஆனது.

அதில், முஷரப் கூறியிருந்ததாவது:-

“காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்பது வழக்கம். அவர்கள் இந்திய இராணுவத்துடன் போரிடுவார்கள். அவர்களை போராளிகளாகக் கருதுகிறோம். அவர்கள் எங்கள் ஹீரோக்கள். பின்னாளில், லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தலையெடுத்தன.

1979-ஆம் ஆண்டு, சோவியத் படைகளை விரட்டுவதற்காக, ஆப்கானிஸ்தானில் மதப் போராளிகளை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்து முஜாகிதீன்களை கொண்டு வந்து பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுத்தோம். அவர்களும் எங்கள் ஹீரோக்கள்தான்”. இவ்வாறு முஷர்ரப் தெரிவித்திருந்தார்.