தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) காலை கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. சபையின் அமர்வை நடத்துவதைத் தடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களையும் சபைக்கு அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறுகிறது.

Leave a Reply