‘தோல்நிற கரிசனைகளால் மகனை இளவரசாக்க மறுத்த அரச குடும்பத்தினர்’

நேற்று முன்திம் சி.பி.எஸ்ஸில் ஒளிபரப்பான உரையாடலொன்றிலேயே குறித்த கருத்தை மேகன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், யாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது என்பது குறித்து வினவப்பட்டதுக்கு, அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பாக அமையும் என தான் நினைப்பதாக மேகன் குறிப்பிட்டிருந்தார்.

இதுதவிர, அரச குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியற்றுத் தான் இருந்ததாகவும், உயிரை மாய்த்துக் கொள்வதை கருத்திற் கொண்டதாக மேகன் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உலகத்துக்கான பிரமாண்டமான திருமணத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் சாதாரண நிகழ்வொன்றில் தானும் ஹரியும் திருமணம் செய்து கொண்டதாக மேகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது தந்தை இளவரசர் பிறின்ஸ், தனது அழைப்புகளை எடுப்பதை நிறுத்தியதாகவும், அவரால் கைவிடப்பட்டதாக தான் உணர்ந்ததாகத் தெரிவித்த ஹரி, தானும் தனது சகோதரரான இளவரசர் வில்லியமும் வேறு பாதைகளில் பயணிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருமணத்தின் போதான தோழிகளின் உடை தொடர்பாக, வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் தன்னை அழ வைத்ததாக மேகன் தெரிவித்துள்ளார்.

தவிர, அரச குடும்பத்தினர் தன்னை அமைதியாக்க முனைந்ததாகவும், தனக்கெதிரான பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமல்லாமல், ஏனையோரைப் பாதுகாப்பதற்காக பொய்யுரைத்தாக மேகன் கூறியுள்ளார்.