தோழர் நகுலன்

தோழர் பத்மநாபா அவர்கள் மேல் அளவு கடந்த பாசம் கொண்ட நகுலன்.புலிகள் சென்னையில் தோழர்களை படுகொலை செய்தநாளில் இருந்து அவர் புலிகளை தீட்டித்தீர்க்காத பொழுதுகளே இல்லை

என்பதை புழல் முகாமே அறியும்.

நாம் மறந்தாலும் தியாகிகள் தின நாளை நினைவூட்டுவார்.முதல் தோழனாய் அஞ்சலிக்கு வந்து நிற்பார்.போஸ்டர் ஒட்டுவதற்கு உறுதுணையாக இருந்து சென்னை நகரமெங்கும் ஒட்டுவார்.அவர் சென்னையில் முதலில் போஸ்டர் ஒட்ட தெரிவு செய்யும் இடம் தோழர்களை புலிகள் படுகொலை செய்த கோடம்பாக்கம்,சக்கரியா காலணி பகுதியாகும்.

சொல்லும் கட்சிப்பணிகளை செவ்வனே செய்யும் தோழர் நகுலன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.