நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
 அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். கடந்த 1968 ஆம் ஆண்டு  ‘புஞ்சி பபா’ என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையை நடிகை மாலினி பொன்சேகா தொடங்கினார்.