நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் வருகைதரும் விமானம் இந்திய வான்வெளியை கடந்துச் செல்வதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. அதற்கான அனுமதியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு சென்றபோது, தன்னுடைய வான்வெளியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். நாட்டை வந்தடைந்த அவரை வரவேற்றும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது.