‘நாட்டை விட்டு அர்ஜுன மகேந்திரன் வௌியேறி​விட்டார்’

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார்.