’’நிதியை எடுத்து செலவிடுவது குற்றமல்ல’’ – ரணில் விக்ரமசிங்க

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.