‘நிலைமையைக் கட்டுப்படுத்த, முழு அதிகாரமும் பயன்படுத்தப்படும்’

இது தொடர்பில் நேற்று (13) அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில், நேற்றிரவு (13) முஸ்லிம்களுக்கு எதிராகச் சிலர் வன்முறைகளைக் கட்டவிழ்த்தனர் என்றும் சிலாபத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக, இராணுவமும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து, முழு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், சுமுகமாகத் தீர்வை காண்பதற்கே இராணுவம் விரும்புகிறது எனவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பொதுமக்களிடம் அவர் இதனூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.