நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.