நீர்கொழும்பில் புதிதாக 23 தொற்றாளர்கள்

நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் புதிதாக 23 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, நீர்கொழும்பு நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த சோலங்க தெரிவித்தார். நகரின் சில பிரதேசங்களில் 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.