நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால் அந்தப் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகி றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அருகே தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற் படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. சீன கடல் பகுதியில் அமெரிக்கா உளவு பணியில் ஈடுபட்டதாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

இதை மறுத்த அமெரிக்க கடற் படை, ஆய்வுப் பணிக்காகவே நீர் மூழ்கி பயன்படுத்தப்பட்டது. அந்த நீர்மூழ்கி சர்வதேச எல்லையில் மிதந்தபோது, சீனா பறிமுதல் செய்து விட்டது என்று குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தினர். அதன்அடிப்படையில் ஆளில்லா நீர்மூழ்கியை 5 நாட் களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் சீனா நேற்று ஒப்படைத்தது.