நுண்நிதி கடனை நிறுத்த கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

இதன்போது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில், நுண்நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்களால், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு நகரில், வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யுவசக்தி பெண்ககள் அமைப்பினரால், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரில் ஒன்றுதிரண்ட மக்கள், அங்கிருந்து பேரணியாக புதுக்கடியிருப்பு நகரை வந்தடைந்து, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், நுண்நிதி கடன் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில், துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

நுண்நிதி கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 08ஆம் திகதியன்று, ஹிங்குராங்கொடவில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்துக்கு ஆதராவக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.