குளியாப்பிட்டி, தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளதுடன், பிரதேசவாசிகளால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.