பணய கைதிகளுக்கு ஆதரவாக 2.9 லட்சம் பேர் பேரணி

அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 லட்சம் பேர் பேரணியாக சென்றுள்ளனர்.

இந்த பேரணியில், பங்கேற்றவர்கள் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி காணப்பட்டனர். ஒக்டோபர்  7-ந் திதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.