பல்கலைக்கழகம் முன் போதைப்பொருள் விற்றவர் கைது

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.