கண்டி-பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் விவசாய பிரிவில் நியமிக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கதுருவெல முஸ்லிம் காலனியைச் சேர்ந்த 25 வயது கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்ய பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.