பாஜகவுக்கு தலைவலியாக பத்றுதீன் அஜ்மல் திருப்பம்

தென் மாநிலங்களில் முஸ்லிம்களிடம் கணிசமாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போல வடகிழக்கு மாநிலங்களில் பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களிடையே பிரபலமாகி வருகிறார் பத்றுதீன் அஜ்மல்.

அசாமில் இந்திய முஸ்லிம்களைத் தவிர பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பல தொகுதிகளில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உள்ளனர். பெங்காலி மொழி பேசும் முஸ்லிமான பத்றுதீன் அஜ்மலுக்கு அவர்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது.