பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர்.  குறித்த தூதுக்குழுவினர் இன்று(22) அதிகாலை வத்திக்கானுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளனர். இதனை அருட்தந்தை ஜூட் கிறிஷாந்த உறுதிப்படுத்தியுள்ளார்