பாரிய காட்டுத் தீ : 10 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.