‘பின்லேடனின் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை‘

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தந்தையின் மறைவுக்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்புக்கு வரத் நான் வற்புறுத்தப்பட்டேன். ஆனால் அதனை நிராகரித்து விட்டேன். நான் அல் கொய்தா அமைப்பில் இணைந்திருந்த காலங்கள் முட்டாள்தனமானது, அது எனது வாழ்க்கையை வீணாக்கியது என்பதைப் பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.

நானும் எனது சகோதரனும் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலோடு தான் வாழ்க்கையை நகர்த்தி வந்தோம்” என்றார்.

மேலும் தனது மனைவியுடன் இணைந்து இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு வருவதாகவும், வாழ்க்கையில் ஒரு முறையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது தனது கனவு எனவும் ஒமர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.