பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்

(News.LK – Tamil)

இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம்.