பெசிலிடம் இருந்தவை மஹிந்தவுக்கு மாற்றம்

நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்‌ஷவுக்கு கீழிருந்த நிறுவனங்கள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழிருக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான, சட்ட கட்டமைப்பை திருத்தி சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பெசில் ராஜபக்‌ஷவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், நேற்று முன்தினம் (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.