பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் விலை உயர்வு: கிராமப்புற பெண்கள் பெரும் பாதிப்பு

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பலதரப்பட்ட வரிகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, இலங்கையில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் விலை ஆசியாவிலேயே மிக உயர்ந்த மட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அக்கூட்டமைப்பின் விசேட நிபுணர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் மீது விதிக்கப்படும் பல்வேறு இறக்குமதி வரிகள் போன்றன இவற்றின் சில்லறை விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. இது கிராமப்புற பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகரித்து வரும் பணவீக்கம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான வரிகள் மற்றும் கூடுதல் உற்பத்திச் செலவுகள் உள்ளிட்ட பிற பொருளாதாரக் காரணிகளும் இந்த விலை உயர்வுக்குப் பங்களித்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்தச் சூழ்நிலையானது “மாதவிடாய் சுகாதார பாதுகாப்பற்ற” (Menstrual hygiene insecurity) நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக கிராமப்புற பெண்களும் பள்ளி மாணவிகளும் தங்களது மாதவிடாய் காலங்களில் வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்ல முடியாமல் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இது பரந்த சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இலங்கையில் மாதவிடாய் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து பரந்தளவிலான தேசிய அளவிலான கலந்துரையாடல் ஒன்றின் அவசியம் குறித்தும் மருத்துவர் சஞ்சீவ வலியுறுத்தினார்.

Leave a Reply