பெண் மருத்துவர் கொலை : 4 சந்தேக நபர்களும் சுட்டுக்கொலை

விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.