அனுராதபுரம்: பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி நிபுணர் மருத்துவரை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.