பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: ரணில்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை  காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை  நிரூபிக்க தயாராக உள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின்  பிரதமராக  இன்று பதவியேற்றதன் பின்னர்   ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.