பொறுப்பற்ற முறையில் ரயில்வே கேட்டை கடந்த பேருந்து

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில், நாவலப்பிட்டி வரகாவ ரயில் கேட் மூடப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்தை ஒரு சிறிய இடத்தின் வழியாக பொறுப்பற்ற முறையில் செலுத்திய குற்றச்சாட்டில், தனியார் பேருந்து சாரதி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.