பொலிஸ் இடமாற்றங்கள் தொடர்பான விவகாரம் தொடர்பாக இன்று (08) பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, பொலிஸ் ஆணைக்குழுவை புறக்கணித்து, பொலிஸ்மா அதிபரால் (ஐ.ஜி.பி) பொலிஸ் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் ஒரு செயல்முறை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.