பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.