போராட்டக்காரர்கள் வெளியேறத் தீர்மானம்

காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதென அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பிரதேச மற்றும் நகரங்களை அடிப்படையாக கொண்டு, போராட்டத்தை வலுவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.