போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

இந்நிலையில் ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்   எவ்விதத் தொடர்பும் இல்லை‘ எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தலிபான் ஒரு சுயாதீன விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகவும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வருகின்றோம்” என்று கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.