குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் சில தனி நபர்கள் இவ்வாறு மோசடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று சுமார் 2000 ரூபாய் அரவிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் பல வர்த்தக நிலையங்கள் குறித்த நபருக்கு பணம் வழங்கவில்லை என அறியமுடிகிறதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் குறித்த தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணம் வசூலிப்பதாக தெரியவருகிறது.