மட்டக்களப்பில் கண்டன பேரணி

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை  முன்னெடுத்தன.