மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி

மத்​திய கிழக்​கில் அதி​கரித்து வரும் பதட்​டங்​களுக்கு மத்​தி​யில், ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலை​யங்​களை அமெரிக்க விமானப் படை தாக்​கியது. ஈரானின் ஃபோர்​டோ, நடான்ஸ் மற்​றும் இஸ்​பஹான் அணுசக்தி நிலை​யங்​கள் மீதான அமெரிக்க வான்​வழித் தாக்​குதலை தொடர்ந்து மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது.