மனிதாபிமானத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஐ.நா.

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய பங்காளிகள்   ஒரு மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP) வியாழக்கிழமை (11) ஆரம்பித்தனர்.