மனோகணேசனால் முடியுமென்றால் கூட்டமைப்பால் ஏன் முடியாது?: முன்னாள் முதலமைச்சர் கேள்வி!!

யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அரசியல் கைதிகளை மனோ கணேசன் சென்று பார்த்து வாக்குறுதியளித்து அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கின்றார். ஏனென்றால், தற்போது மனோ கணேசனைத் தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழலிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்களால் போகமுடியாது.

இவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான வாக்குறுதிகள் கொடுத்துக் கொடுத்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆகையால், அரசியல் கைதிகளுக்கு மீண்டுமொருமுறை அவர்கள் போய் பொய் வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால் தாங்கள் ஒழிந்து கொண்டு மனோகணேசனை அனுப்பியிருக்கிறார்கள் எனவும் அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.