யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.