மற்றுமோர் அரகலயவை அடக்குவேன்: ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன். அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன். அவசரகாலச் சட்டத்தையும் அமுல் படுத்துவேன் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.