“மலாயன் கபே”க்கு காலை உணவு

சாதரணமாக உள்ளே “சர்வர்” ஆக வேலை செய்து கொண்டு இருந்த ஒரு இளைஞனிடம் இட்லி, வடை இருக்கா? என்றேன்..
“வடே தியனவா” என்று சிங்களதில் பதில் வந்தது.
கொஞ்சம் என்னை சுதாகரித்து கொண்டு நான் கொழும்பிலா? யாழ்ப்பாணத்திலா இருக்கிறேன்? என்டு யோசித்து விட்டு மீண்டும் தமிழில் கதைக்க அவன் யோசித்து கொண்டு இருக்க …
ஒரு சிங்கள இளைஞர் என்று உணர்ந்து கொண்டேன் .

இன்னும் ஒருவர் அங்கே வேலை செய்யும் இன்னொரு சிங்கள இளைஞரை ஒருவரை திட்ட நானும் உடனே மெனேஜரை கூப்பிட்டு இங்கே வருபவர்கள் 95% தமிழர்கள். இங்கே எதுக்கு தமிழ் தெரியாதவர்ளை வேலைக்கு வைத்து உள்ளீர்கள்? என்று கேட்டேன்..
அதுக்கு அந்த மேனேஜர் சொன்ன பதில் ஆச்சரிய பட வைத்தது.
(நான் பல இடங்களில் கேள்வி பட்டு இருந்தாலும்..
நேராக கண்டது இது தான்..)
தமிழ் இளைஞர்கள் இப்போ வேலைக்கு வருவது இல்லை.
வந்தாலும் சில நாட்களில் நின்று விடுவார்கள். தாங்கள் என்ன செய்வது? என்றார்..
இது தான் இன்றைய சமூக பிரச்சனையே!.

அதன் பின்னர் நான் அந்த சிங்கள “சர்வர்” இடம் சிங்களதில் உரையாடி ஏன் இங்கு வந்து வேலைக்கு வந்தீர்? சொந்த இடம் எது? என்றேன்..
அதுக்கு அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கிவாரி போட்டது..
தான் Civil Engineering (Jaffna University) படித்து கொண்டு இருப்பதாகவும் ,
(Final Year Student) சொந்த இடம் தென்னிலங்கை மாத்தறை, வயது 23 என்றும் சொன்னார்.
(எனக்கு உடனே என் மகனின் ஞாபகம் வந்தது. மனசுக்குள் குற்ற உணர்வு. அவன் வேலைக்கு ஆப்பு வைத்து விட்டேனோ என்று )
ஒரு கணம் ஆடி போய் விட்டேன்..

எத்தனையோ தமிழ் இளைஞர்கள் இங்கு யாழ்ப்பாணத்தின் வெளிநாட்டு நம் உறவுகள் காசு கிடைக்க, அதனை போதை பொருள் பாவனை , கஞ்சா மது, மோட்டார் சைக்கிள் என்று சுதியுடன் திரிய
தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள இளைஞன் தன் கஷ்டத்தில் வேலை செய்து படித்து கொண்டு இருக்கிறார்கள்.

பலர் பார்க்க அந்த இளைஞனை கட்டி அனைத்து பாராட்டி, அவன் தொலை பேசி நம்பரை வேண்டி, கொஞ்ச பணத்தையும் கொடுத்து அவன் அனுமதியுடன் புகை படமும் எடுத்து கொண்டேன்.

உலகில் பாஷை தெரியாமல் வேலை செய்வது ஒரு குற்றம் இல்லை.ஒரு
இளக்காரம் இல்லை..
கஷ்டத்தில் தான் வேலை செய்து கொண்டு படிகிறார்கள்..

அவனையும்
என் மகனாக நினைத்து வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்..