அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.