மாணவி மரணம் : ஆசிரியர் குறித்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ‘பி’ அறிக்கை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உள்ளக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.