மாலைதீவு ஜனாதிபதி வந்தடைந்தார்

ஜனாதிபதியுடன் மாலைதீவின் முதல் பெண்மணி (First Lady) மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் 20 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

மாலைதீவின் மாலே நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் “யு.எல். – 116” (UL-116) ரக விமானத்தில் பயணித்த அவர்கள், இன்று மாலை 05:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி முகமது முயிசு உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 06 ஆம் திகதி மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளனர்.