மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன

மியான்மாரின் இரண்டு விமானத் தளங்கள் மீது அடையாளந் தெரியாத தாக்குதலாளிகள் இன்று றொக்கெட்டுகளை ஏவியபோதும் எதுவித உயிரிழப்புகளும் ஏற்படாததோடு, சிறியளவிலான சேதமே ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் தாக்குதல்களை மியான்மார் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தது.