பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார்.