முல்லைத்தீவில் பெரமுனவின் ஆண்டு விழா

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஆளும் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்ன ஹேரத் கலந்துகொண்டார்.

அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், முல்லைத்தீவு தொகுதிக்கான செயற்குழு உறுப்பினர்கள், முல்லைத்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.