முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதால், மக்களின் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார, எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மக்கள் எல்லா இடங்களிலும் கொந்தளித்துப் போயிருப்பதால், நிலைமை சமூகமாகும் வரை அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் நடத்த அரசு ஆராய்ந்து வருகிறது. இதனால், ஊரடங்கோ , பொதுமுடக்கமோ அமுல்படுத்தப்படும் வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது