முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (13) ஆஜரானார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்த ஒரு நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.